புதுக்கோட்டை, டிச.10: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற இருந்த வாகன பொது ஏலம் நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டு பின்னர் தேதி அறிவிக்கப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மவாட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் விடபட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட 88 வாகனங்களில் நான்கு சக்கர வாகனம் – 9, மூன்று சக்கர வாகனம் -2, இரண்டு சக்கர வாகனம் 71, சைக்கிள் – 05 மற்றும் படகு -1 ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி சரகம், காவல் துறை துணைத்தவைர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று 10.12.2025-ம் தேதி காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருந்த வாகன பொது ஏலம் நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டு பின்னர் தேதி அறிவிக்கப்படும். என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
