கீழ்வேளூர், டிச. 10: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழையால் கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையினால் சம்பாதாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. கீழ்வேளூர் ஆனைமங்கலம் கிள்ளுக்குடி சாட்டியக்குடி, ஒக்கூர், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை காக்கழனி, வெண்மணி, தேவூர், வலிவலம், கொடியலத்தூர் ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. தற்போது நீரை வடிய விட்டு உரம், பூச்சி மருந்து தெளிக்காலாம் என்ற நிலையில் மீண்டும் மழை பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
