தேர்தல் காலங்களில் சிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

 

நாகப்பட்டினம், டிச. 10: தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் நாகரத்தினம் கோரிக்கைகள் குறித்து பேசினார்.ஊர்தி ஓட்டுனர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். படித்த தகுதியுள்ள ஒட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தேர்தல் காலங்களில் ஓட்டுனர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் தற்காலிமாக பணிபுரிந்த ஓட்டுனர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்துகொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: