ஜெயங்கொண்டம், டிச.10: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பசுமைப்பள்ளி திட்டத்தின் படி உலக மண்தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் இங்கர்சால் வரவேற்றார். ஆசிரியர் பாவை சங்கர் கலந்துகொண்டு மண்வளமே மனித உயிர்வளம் என்றத்தலைப்பில் மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமான உணவு, நீர் மற்றும் ஆற்றலுக்கு மண் அத்தியாவசியமானது எதிர்கால தலைமுறையினருக்கு உணவு உற்பத்தியை உறுதி செய்ய மண்பாதுகாப்பு அவசியம், மண்தினத்தை 2014ம்ஆண்டு முதல் ஐக்கியநாடுகள் சபையால் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஐந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது.
