கட்டுமான பொருட்கள் திருடிய 3 பேர் கைது

 

திருச்சி டிச.10: திருச்சி, சண்முகா நகர் 5வது கிராஸை சேர்ந்தவர் வேல்முருகன்(71), புதிதாக வீடு கட்டி வருகிறார்.கட்டிட வேலை நடக்கும் இடத்தில் உள்ள பொருட்களை சிலர் திருடி சென்றனர்.
இதுகுறித்து வேல்முருகன் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து திருடிய காளிமுத்து (24), ஹரி விஸ்வா (20), முகமது ரஷீக் (34) ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: