புதுக்கோட்டை, டிச.10: இ-பைலிங் முறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறையை எதிர்த்து, போதுமான தொழில்நுட்பப் பணியாளர் கட்டமைப்பை உருவாக்கும் வரை இம்முறையை நிறுத்தக் கோரி புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்தையன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஏராளமானோர் பங்கேற்றனர். போதுமான தொழில்நுட்பப் பணியாளர் கட்டமைப்பை உருவாக்கும் வரை இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
