அரசியல்வாதி மகனுடன் மேகா ஆகாஷ் திருமணமா…

சென்னை: தமிழக அரசியல்வாதி ஒருவரின் மகனை நடிகை மேகா ஆகாஷ் காதல் திருமணம் செய்யப்போவதாக இணையதளங்களில் செய்தி கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், சமூக வலைத் தளங்களில் அந்த அரசியல் வாதி மகன் யார் என்று நெட்டிசன்கள் தேட தொடங்கிவிட்டனர். இந்நிலையில்தான், மேகா ஆகாஷின் அம்மா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

‘பிரபல அரசியல்வாதியின் மகனுடன் எனது மகளுக்கு திருமணம் என்ற செய்தி முழுக்க முழுக்க வதந்தி. அதில் துளியளவும் உண்மை இல்லை’ என்று அவர் சொன்னார். மேலும், ‘மேகா ஆகாஷின் திருமணம் குறித்து முடிவு செய்ததும், அதை முறைப்படி நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என்றும், ‘அதுவரை தயவுசெய்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொண்டார்.

The post அரசியல்வாதி மகனுடன் மேகா ஆகாஷ் திருமணமா… appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: