நாளை வெளியாகிறது நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாக்கியுள்ளார் “டக்கர்” திரைப்படம்

நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள “டக்கர்” திரைப்படம் (ஜூன்9) நாளை வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சித்தார்த், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக்கினார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் பல படங்களில் நடித்து இந்திய அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

அடுத்ததாக மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உடன் இணைந்த சித்தார்த், உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் திரைப்படத்தில் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அதேபோல பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய, இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் சித்தா திரைப்படத்திலும் சித்தார்த் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனிடையே சித்தார்த் நடிப்பில் அடுத்து திரைக்கு வர தயாராக உள்ள படம் டக்கர். கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து திவ்யன்ஷா, யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படத்திற்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில், ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவர இருக்கும் டக்கர் திரைப்படம் நாளை (ஜூன்9) உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

The post நாளை வெளியாகிறது நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாக்கியுள்ளார் “டக்கர்” திரைப்படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: