விஜய் படத்தின் தலைப்பு சிஎஸ்கே?

சென்னை: விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு சிஎஸ்கே என்ற தலைப்பு வைக்க யோசனை நடக்கிறது. ‘விஜய் 68’ படத்தின் தலைப்பு குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே என்பது ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற சென்னை அணி பெயரின் சுருக்கம் ஆகும். தமிழக இளைஞர்கள் மத்தியில் சிஎஸ்கே பெயர் பிரபலம். அதனால் அதையே தனது படத்துக்கு பெயராக வைக்க வெங்கட் பிரபு யோசிக்கிறாராம்.

சமீபத்தில் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே தான் வென்றது. அந்த அணியின் தீவிர ரசிகராக வெங்கட் பிரபு உள்ளார். சிஎஸ்கே ஜெயித்ததும் ஆட்டம் பாட்டத்துடன் அவர் பார்ட்டியும் வைத்து கொண்டாடினார். இதனால் சிஎஸ்கே என்ற தலைப்பு விஜய் படத்திற்கு வைப்பது உறுதியானால் விஜய் ரசிகர்களும் சிஎஸ்கே ரசிகர்களும் உற்சாகம் அடைவார்கள் என படக்குழு எதிர்பார்க்கிறது. விஜய் பிறந்த தினம் இந்த மாதம் வருகிறது. அப்போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

The post விஜய் படத்தின் தலைப்பு சிஎஸ்கே? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: