வாய்ப்பு தேடும் ராய் லட்சுமி

தென்னிந்திய மொழிகளில் பிசியாக இருந்த ராய் லட்சுமி, பாலிவுட்டில் கொடி பறக்க விட ஆசைப்பட்டு மும்பையில் வீடு வாங்கி குடியேறினார். ஆனால், அங்கு மட்டுமல்ல, எந்த மொழியிலும் அவர் எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சில படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடினார். அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு வருவது குறைந்ததால், ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பை எதிர்பார்க்கிறார்.

குறைந்த நாட்கள் கால்ஷீட், அதிக சம்பளம் கிடைக்கும் என்பதாலேயே ஒரு பாடலுக்கு ஆட ஆர்வமாக இருக்கிறாராம். தவிர, தனது இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரைக் காதலிக்கும் ராய் லட்சுமி, விரைவில் அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.

The post வாய்ப்பு தேடும் ராய் லட்சுமி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: