ஐபிஎல் போட்டியில் இன்று பலமான நிலையில் பஞ்சாப் தோல்வி மழையில் கொல்கத்தா

* ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மீண்டும் மோதும் 44வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெறும்.
* இதில் மோதும் இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் கொல்கத்தா 21 முறையும், பஞ்சாப் 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக பஞ்சாப் 262, கொல்கத்தா 261 ரன் அடித்து நொறுக்கியுள்ளன.

* குறைந்தபட்சமாக பஞ்சாப் 111 ரன்னிலும், கொல்கத்தா 95 ரன்னிலும் சுருண்டு உள்ளன.
* இவ்விரண்டு அணிகளும் கடைசியாக களம் கண்ட 5 ஆட்டங்களில் பஞ்சாப் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
* மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 ஆட்டங்களில் கொல்கத்தா 2-3 என்ற கணக்கிலும், பஞ்சாப் 3-2 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளன.
* நடப்புத் தொடரில் போராடும் அஜிங்கிய ரகானே தலைமையிலான நடப்பு சாம்பியன் கொல்கத்தா இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது.
* ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5ல் வெற்றி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

* இந்த 2 அணிகளுக்கும் இன்றைய ஆட்டம் 9வது லீக் ஆட்டமாகும்.
* கொல்கத்தாவில் இந்த 2 அணிகளும் மோதிய 13 ஆட்டங்களில் கொல்கத்தா 9-4 என்ற கணக்கில் முன்னிலையை தொடர்கிறது.

The post ஐபிஎல் போட்டியில் இன்று பலமான நிலையில் பஞ்சாப் தோல்வி மழையில் கொல்கத்தா appeared first on Dinakaran.

Related Stories: