மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஒசாகா அதிர்ச்சி தோல்வி


மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் போட்டியிலேயே நட்சத்திர வீராங்கனையான நவாமி ஒசாகா தோல்வியடைந்து வெளியேறினார். பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரையில் நடைபெறும் போட்டியாக ஸ்பெயினின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கருதப்படுகிறது. ரூ.79 கோடி மொத்த பரிசுத்தொகை கொண்ட இப்போட்டி, ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் வழங்கும். இந்த ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் துவங்கியுள்ளன.

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), இத்தாலியின் லூசியா ப்ரோனெட்டி உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் லூசியா ப்ரோனெட்டியும், 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் நவோமி ஒசாகாவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இதில் அபாரமாக செயல்பட்ட லூசியா ப்ரோனெட்டி 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஒசாகாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனையான ஒசாகா முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஒசாகா அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: