டி20 உலக கோப்பை ஆஸி அணி அறிவிப்பு: மிட்செல் மார்ஷ் கேப்டன்

மெல்போர்ன்: உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் இந்தியா, இலங்கை நாடுகளில் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் விளையாடும், மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸி அணி பட்டியலை ஆஸி கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், சுழல் பந்து வீச்சாளர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன் சர்வதேச போட்டிகளில் ஆடாத, கூப்பர் கனோலி, உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். வீரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்படுத்த வரும் 31ம் தேதி வரை ஐசிசி அவகாசம் தந்துள்ளது. எனவே, ஆஸி அணி வீரர் பேட் கம்மின்ஸ் உடல் நிலை சீராகி தகுதி பெற்றால், தற்போது டி20 அணியில் இடம்பெற்றுள்ள அவர் மாற்றப்பட மாட்டார் என கூறப்படுகிறது.

ஆஸி அணி வரும் பிப்ரவரி 11ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. பின், பிப். 13ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், 16ம் தேதி ஓமன் அணிக்கு எதிராகவும் ஆஸி அணி மோதவுள்ளது. முன்னதாக இம்மாத பிற்பகுதியில் நடக்கும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா மோதவுள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளில், குரூப் ஸ்டேஜ் போட்டிகள் அனைத்தையும், ஆஸ்திரேலியா அணி இலங்கையில் ஆடும். அதேசமயம், சூப்பர் 8 போட்டிக்கு தகுதி பெற்றால் குறைந்த பட்சம் ஒரு போட்டியிலாவது இந்தியாவில் ஆட வேண்டி வரும்.

* ஆஸி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஸ், மேத்யூ குனெமான், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜம்பா.

Related Stories: