2026ல் இந்திய கிரிக்கெட் அணி ரொம்ப பிஸி: டி.20 உலக கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு சாம்பியன் டிராபி கோப்பையை கைப்பற்றியது. சர்வதேச டி.20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் இந்தியா தடுமாறியது. இந்நிலையில் இந்த ஆண்டில் இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் டி.20 உலக கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் ஆட உள்ளது. இந்தியா பங்கேற்க உள்ள தொடர்கள் விபரம்:
* நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இந்த போட்டிகள் ஜனவரி 11ம்தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
* ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்.7ம்தேதி முதல் மார்ச் 9ம்தேதி வரை நடைபெற உள்ளது. 20அணிகள் பங்கேற்கும் இந்ததொடரை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன.
* மார்ச் 26ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஐபிஎல்தொடர் இந்தியாவில் நடைபெறஉள்ளது.
* ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் தேதி, மைதானங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
* ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி.20 போட்டிகளில் ஜூலை 1ம் தேதி முதல் 11ம் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் ஜூலை 14 முதல் 19ம் தேதி வரையும் நடக்கிறது.
* ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்லும் இந்தியா, 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.
*செப்டம்பரில் வங்கதேசம் செல்லும் இந்தியா, அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி.20 போட்களில் மோதுகிறது.
* அக்டோபர் மற்றும் செப்டம்பரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 டி.20, வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது.
* செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4ம்தேதி வரை ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இடம் பெற்றுள்ள டி.20யில்ஆட உள்ளது.
* அக்டோபரில் நியூசிலாந்து செல்லும் இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் விளையாடுகிறது. இவ்வாறு அனைத்து மாதத்திலும் இந்திய அணிக்கு பிஸியான அட்டவணை உள்ளது.

Related Stories: