சென்னை: சேலம் தலைவெட்டி முனியப்பன் கோயில் அல்ல, புத்தர் கோயில் என்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பே தலைவெட்டி முனியப்பன் என்றே பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. 1991ல் இயற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டப்படி எந்த கோயிலையும் மாற்றம் செய்ய இயலாது. எனவே தலைவெட்டி முனியப்பன் கோயிலை புத்தர் கோயிலாக ரிட் வழக்கில் உத்தரவு பிறப்பிக்க இயலாது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அறநிலையத்துறை வாதத்தை ஏற்று தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.
The post நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதிப்பு!! appeared first on Dinakaran.