39வது போட்டியில் இன்று வலுவான அணியாக குஜராத் வளைக்க துடிக்கும் கொல்கத்தா

* கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு, 7.30 மணிக்கு நடக்கும் ஐபிஎல் 39வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதுகின்றன.

* இந்த இரு அணிகளுக்கும், இது 8வது போட்டி.

* கொல்கத்தா, குஜராத் அணிகள் இதுவரை, 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

* அந்த போட்டிகளில் 2ல் குஜராத்தும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன. ஒன்றில் முடிவு கிடைக்கவில்லை.

* இரு அணிகளும் மோதிய போட்டிகளில் அதிகபட்சமாக, குஜராத் 204 ரன்களையும், கொல்கத்தா 207 ரன்களையும் குவித்துள்ளன.

* நடப்புத் தொடரில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, 7 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றி, 2ல் தோல்வி பெற்று, 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

* இந்த தொடரில் அஜிங்கிய ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி, 7 போட்டிகளில் விளையாடி, 3ல் வெற்றி, 4ல் தோல்வி அடைந்து, 6 புள்ளிகளுடன், பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.

The post 39வது போட்டியில் இன்று வலுவான அணியாக குஜராத் வளைக்க துடிக்கும் கொல்கத்தா appeared first on Dinakaran.

Related Stories: