பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. இருப்பினும், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், 18 பந்துகளில் 23 ரன் எடுத்து, 1000 ரன்களை கடந்தார். ஐபிஎல் போட்டிகளில் 30 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ள அவர், குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன் கடந்த 2வது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.
இந்த பட்டியலில், குஜராத் டைடன்ஸ் அணி வீரரான, தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், 25 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், சச்சின் டெண்டுல்கர், ருதுராஜ் கெயிக்வாட் (இருவருக்கும் 31 இன்னிங்ஸ்கள்), திலக் வர்மா (33 இன்னிங்ஸ்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
The post 30 இன்னிங்சில் 1000 ரன் ரஜத் படிதார் சாதனை appeared first on Dinakaran.