முன்னணி வீரர் ஜம்பா சன்ரைசர்சில் விலகல்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தில் இடம் பெற்றிருந்த முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆடம் ஜம்பா, தோள் பட்டை காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில், கர்நாடகாவை சேர்ந்த 21வது இடது கை பேட்ஸ்மேன் ரவிச்சந்திரன் ஸ்மரன் அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், அடிப்படை விலையான, ரூ. 30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்.

இவர், 7 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி, 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். சராசரி, 64.50. இவர், பஞ்சாப் அணிக்கு எதிராக இரட்டைச் சதமும் விளாசியுள்ளார். தவிர, 2024ல், ஏ பிரிவில் 10 போட்டிகளில் ஆடிய அனுபவம் ஸ்மரனுக்கு உண்டு. ஆடம் ஜம்பா, ரூ. 2.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post முன்னணி வீரர் ஜம்பா சன்ரைசர்சில் விலகல் appeared first on Dinakaran.

Related Stories: