இதைத்தொடர்ந்து அன்னாலெஷ்னேவா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். தனது மகன் சிறு காயத்துடன் உயிர் பிழைத்ததால் ஏழுமலையானுக்கு மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினார். அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதால் ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தேவஸ்தான உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார். இன்று காலை சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கி வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
கருட சேவை நாட்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதம் தோறும் பவுர்ணமி நாளில் மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த ஆண்டு கருடசேவை நடைபெறும் நாட்கள் குறித்து தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மே மாதம் 12ம்தேதி, ஜூலை 10ம் தேதி, ஆகஸ்ட் 9ம்தேதி, அக்டோபர் 7ம்தேதி, நவம்பர் 5ம்தேதி ஆகிய நாட்களில் கருடசேவை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டில் பவுர்ணமி நாளான ஜூன் 11ம் தேதி ஜேஷ்டாபிஷேகம், செப்டம்பர் 7ம்தேதி சந்திர கிரகணம், டிசம்பர் 4ம்தேதி கார்த்திகை தீப உற்சவம் ஆகியவை காரணமாக அன்றைய நாளில் கருட சேவை ரத்து செய்யப்படுகிறது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறை காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று 79,100 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,791 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.52 கோடி காணிக்கை செலுத்தினர். தமிழ்புத்தாண்டு தினமான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 2 கி.மீ. தூரமுள்ள ஏடிஜி காட்டேஜ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post தீ விபத்தில் மகன் உயிர் பிழைத்ததால் பவன் கல்யாண் மனைவி முடி காணிக்கை appeared first on Dinakaran.