இதை தொடர்ந்து சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் தலைமையில் ‘சமத்துவ நாள்’ உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற உள்ள சமத்துவ நாள் விழாவில், ரூ.227 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான 18 விடுதி கட்டிடங்கள், 46 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, 19 சமுதாய நலக்கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் 1000 பழங்குடியினர் குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 48,436 பயனாளிகளுக்கு ரூ.104 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். அன்றைய தினம் அம்பேத்கரின் இரண்டு நூல்களையும், வன உரிமை சட்டத்திற்கான வரைபடத்தையும் வெளியிடுகிறார். விழாவில் பிரகாஷ் அம்பேத்கர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் தலைமையில் இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
The post அம்பேத்கர் பிறந்த நாளான சமத்துவ நாளையொட்டி ரூ.332.60 கோடியில் நலத்திட்ட உதவி எம்.சி.ராஜா கல்லூரிக்கு புதிய விடுதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.