தமிழக சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பண்ருட்டி வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) பேசியதாவது: சமூக வளை தலங்களில் எங்கு பார்த்தாலும் ஆபாசமும், அருவருக்கத்தக்க காட்சிகளும் கொட்டிக்கிடக்கிற காரணத்தினால், இளைய தலைமுறை தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி, தம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரையும், சமூகத்தையும் மதிக்காத ஒரு நிலை ஏற்படுகிறது.
ஆசிரியர்கள் இன்றைக்கு மாணவர்களை அடிக்க முடியாது, கண்டிக்க முடியாது. ஆதலால், பிரம்பு தரவில்லையென்றாலும் பரவாயில்லை, மாணவர்களை கண்டிக்கிற, ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட அந்த உரிமையை மீண்டும் வழங்க வேண்டும்.
The post மாணவர்களை கண்டிக்கிற உரிமையை ஆசிரியர்களுக்கு மீண்டும் தர வேண்டும்: வேல்முருகன் பேச்சு appeared first on Dinakaran.