ஆதிதிராவிடர்களுக்கு 25,000 பழைய வீடுகளை மறுசீரமைக்க ரூ.600 கோடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

சட்டப்பேரவையில் நேற்று அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் பேசும்போது, “25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர்களுக்கு வீடு வழங்கப்பட்டது. தற்போது அது பழுதடைந்துள்ளதால், அந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படுமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “2001க்கு முன்பாக கட்டப்பட்ட பழமையான பழுதடைந்துள்ள வீடுகளுக்கு ரூ.600 கோடி செலவில் முதலமைச்சர் மறு கட்டுமான திட்டம் மூலம் 25,000 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 154 பழுதடைந்த வீடுகளும், அந்தியூரில் 36 வீடுகளும் மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊரக பகுதிகளில் சிறப்பு திட்டம் மூலம் ரூ.800 கோடியில் சிறு தரைபாலங்கள் அனைத்தும் மேம்பாலங்கள் ஆகவும், புதிய சாலைகள் அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்ட்டு வருகிறது” என்றார்.

The post ஆதிதிராவிடர்களுக்கு 25,000 பழைய வீடுகளை மறுசீரமைக்க ரூ.600 கோடி: அமைச்சர் ஐ.பெரியசாமி appeared first on Dinakaran.

Related Stories: