குறும்படம், சுருள்பட போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்


சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக, தொலைநோக்கு சிந்தனையாளர்-கலைஞர் குழுவின் சார்பில் குறும்பட போட்டி மற்றும் சுருள்பட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிறந்த மூன்று குறும்படங்களை வெற்றி படங்களாக தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மேலும் சுருள்பட போட்டியில் பங்கேற்ற 10 போட்டியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. குழுவின் தலைவர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். இணை தலைவர் சமூகநலம், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர் என்ற தலைப்பிலான சிறப்பு மலர் குழுவின் தலைவரால் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, வெற்றி பெற்ற மூன்று குறும்பட போட்டியளர்களான ரஞ்சித்துக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், அயூப்கான் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் மற்றும் ஜெயகுமார் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் (காசோலையாக) வழங்கப்பட்டன. மேலும் சுருள்பட போட்டியில் பங்கேற்ற 10 போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தொலைநோக்கு சிந்தனையாளர்-கலைஞர் குழுவின் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் ரவி சுப்பிரமணியன் மற்றும் முனைவர் இன்னாசிமுத்து (காணொலி வாயிலாக) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post குறும்படம், சுருள்பட போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: