கேள்விக்கான பதிலை சுருக்கமாக கூறுங்கள்; ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும்: அப்டினுதான் பதில் சொல்லணும்: அமைச்சர்களுக்கு சபாநாயகர் அறிவுரை


தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, சிங்காநல்லூர் கே.ஆர்.ஜெயராமன், “கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், நேற்று மற்றும் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் குடிநீர் வரவில்லை என்று கூறினர். இது தொடர்பாக மாநகர ஆணையரை அனுப்பி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 7 நகராட்சி, 33 பேரூராட்சிகள் உள்ளது. 22 லட்சம் மக்கள் பேர் உள்ளனர். சிறுவாணி, பிள்ளூர் ஆகிய 6 திட்டப்பணிகள் மூலம் 325 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், நபருக்கு 142 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

பிள்ளூர் கூட்டுக் குடிநீர் திட்டம் பைப்லைன் போடுவதற்கு தடைஆணை பெறப்பட்டதால் 2 ஆண்டுகள் தடைபட்டது. பின் பணிகள் முடிக்கப்பட்டது. நீர்கள் ஆரம்பித்தீர்கள், நாங்கள் முடித்துள்ளோம் என்று பதில் அளித்தார். கோவை பகுதியில் வழங்கப்படும் குடிநீர் குறித்து புள்ளி விவரங்கள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசினார். அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் போது ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும் என பதில் சொல்லுங்கள். ஏழு நிமிடங்களாக பதில் சொல்கிறீர்கள், நிறைய உறுப்பினர்கள் பேச வேண்டியுள்ளது. கேள்விக்கான பதிலை சுருக்கமாக கூறுங்கள் என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,“இன்று கேட்ட கேள்விக்கு மட்டும் நான் பதில் சொல்லவில்லை. நேற்று அதற்கு முன்தினம் கோவை பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கும் சேர்த்துதான் பதில் சொன்னேன் என்று சபாநாயகரிடம் தெரிவித்தார். அதற்கு, சபாநாயகர் அப்பாவு, நான் ஒண்ணும் தவறாக சொல்லவில்லை” என அடுத்த கேள்விக்கு சென்று விட்டார். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post கேள்விக்கான பதிலை சுருக்கமாக கூறுங்கள்; ஆம், இல்லை, பரிசீலிக்கப்படும்: அப்டினுதான் பதில் சொல்லணும்: அமைச்சர்களுக்கு சபாநாயகர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: