தமிழக சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அறந்தாங்கி ராமச்சந்திரன் (காங்கிரஸ்) பேசியதாவது: கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கிறது. அதை மாநிலப் பட்டியலுக்கு நாம் மாற்ற வேண்டும். தமிழக முதல்வர், காலை உணவு திட்டத்தை அறிவித்த பிறகு, இந்தியாவிலேயே இடைநிற்றல் குறைவாக உள்ள மாநிலம் எதுவென்றால் தமிழ்நாடு தான். 16 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2022ம் ஆண்டுக்கு பிறகு, காலை உணவு திட்டம் கொண்டு வந்த பிறகு 5 சதவீதமாக குறைந்திருக்கிறது.
வருங்காலங்களில் அது இன்னும் குறையும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். காலை உணவு திட்டத்தைக் கொண்டு வந்த பிறகு அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை, மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. ஆகவே, தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்படுத்தியுள்ள காலை உணவு திட்டத்தை, 1 முதல் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும்.
The post காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்: காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.