தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும். இன்று கேள்வி பதில் கிடையாது. உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீது நேற்று விவாதம் மட்டுமே நடந்தது. அமைச்சர்களின் பதிலுரை இடம்பெறவில்லை. அதனால் இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கியதும், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விவாதத்துக்கு பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை ஆகிய மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். விவாதத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட சில கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். விவாதத்துக்கு பதில் அளித்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள்.
The post பேரவையில் இன்று… appeared first on Dinakaran.