நடைமேடையில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணும், இளைஞனும் பொது இடத்தில் ஆபாசமான செயலில் ஈடுபடுவது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், ரயிலுக்காகக் காத்திருக்கும் ஓர் இளைஞன், அருகில் நிற்கும் இளம் பெண்ணின் டி-ஷர்ட்டுக்குள் கையை விடுவதை காணமுடிகிறது. இருவரின் வயதும் தெளிவாகத் தெரியவில்லை. மடவாரா மெட்ரோ நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து, ‘கர்நாடகா போர்ட்ஃபோலியோ’ என்ற எக்ஸ் பக்கத்தில் இந்தக் காணொளி முதலில் வெளியானது.
இதுகுறித்து நெட்டிசன்கள் வெளியிட்ட பதிவில், ‘பெங்களூரு மெட்ரோவும் டெல்லி மெட்ரோவின் கலாசாரத்தை நோக்கி நகர்கிறதா?, இதற்கு முன்னர் டெல்லி மெட்ரோவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன’ என்றும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். வெறும் 30 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த காணொளி காட்சிகளை டிவி செய்திச் சேனல்களும் வெளியிட்டுள்ளன.
The post பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண்ணின் டி-ஷர்ட்டுக்குள் ஆபாச செய்கை: வீடியோ வைரலால் நெட்டிசன்கள் கோபம் appeared first on Dinakaran.