திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

திருச்சி, ஏப்.18: திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவில் கோடைக்கால பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வரும் ஏப்.25 முதல் ஏப்.15 வரை 21 நாட்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் இப்பயிற்சிகள் நடைபெறும். இதில் தடகளம், கால்பந்து, வளைகோல் பந்து, கையுந்து பந்து, வூசூ மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு கட்டணமில்லா பயிற்சி முகாம் நடத்தப்படும்.

இப்பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தினமும் ஊட்டச்சத்துமிக்க உணவு மற்றும் பயிற்சி நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவாியில் நேரிலோ அல்லது 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தொிவித்துள்ளார்.

The post திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: