திருச்சி, ஏப்.23: திருச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்புத்துறையின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகளில் பயின்று தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளை தொிவித்து கொண்டனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காக்கும்-நம்மைக் காக்கும் 48, புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர், கலைஞாின் கனவு இல்லம் போன்ற பல்வேறு முன்னோடி அரசு திட்டங்கள் கடைக்கோடியில் வாழும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது.
மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யவதையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்புத் துறையின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையத்தின் குரூப் 1, 2, 2-ஏ, குருப் 4 மற்றும் வீஏஓ ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் போட்டித் தேர்வர்களுக்கு பேருதவியாக உள்ளன. இப்பயிற்சி வகுப்பின் மூலம் பலர் தேர்வில் வெற்றிபெற்று அரசு பணிகள் பெற்றுள்ளனா். இந்த தோ்வில் வெற்றி பெற்ற வேலை நாடுநர்கள் தங்கள் மனமார்ந்த நன்றியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொிவித்துள்ளதாவது:
தங்கமணி:
நான் கடந்த குருப் 4 போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று பொதுப்பணித்துறையில் தட்டச்சர் பணியில் சேர்ந்துள்ளேன். இதற்கு காரணமான தமிழ்நாடு அரசுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை நான் அடைவதற்கு பேருதவியாக இருந்தது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்ட இலவச பயிற்சியே காரணம். இதுபோன்ற வகுப்புகள் பல போட்டி தேர்வர்களுக்கு வரப்பிரசாதமாகும். இச்சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அகல்யா:
நான் குருப் 4 போட்டித்தேர்வில் 568 மதிப்பெண் பெற்றேன். எனது வகுப்பு சார்ந்த மதிப்பெண் 287. நான் தஞ்சாவூரில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வாகியுள்ளேன். திருச்சி வேலை வாய்ப்பு அலுவலக இலவச பயிற்சி மூலம் பெற்ற பயிற்சியால் தான் என்னால் இந்த வெற்றியை பெற முடிந்தது. வரும் காலங்களில் மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்க காரணமான மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு முதல்வருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அக்ஷயா:
நான் 2024 குரூப் 4 போட்டித்தேர்வில் ஆயிரத்து 509 மதிப்பெண் பெற்று வகுப்பு சார்ந்த மதிப்பெண் 587 பெற்று பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறையில் தட்டச்சர் பணிக்கு தேர்வாகியுள்ளேன். தனியார் பயிற்சி மையங்களில் சேர்வதற்கு எனக்கு வசதி இல்லை. எனவே மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக இலவச பயிற்சி மூலம் பயிற்சி பெற்று இந்த இலக்கை அடைந்தேன். இந்த இலவச பயிற்சி அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு இவ்வாய்ப்பை அமைத்து தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி.
சைரா பானு:
நான் கடந்த 2022 குரூப் 2, 2யு தேர்வில் தேர்வானேன். தற்பொது 2024 குரூப் 4 தேர்வில் தேர்வாகியுள்ளேன். இந்த வெற்றிக்கு காரணம் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் இலவச பயிற்சியே. இப்பயிற்சி எனக்கு மிக பயனுள்ளதாக அமைந்தது. அரசு பயிற்சி மையம் சிறந்ததாகவும், தரம் மற்றும் பயனுள்ளதாக இருந்தது. இந்த பயிற்சி வாயிலாக மேலும் பலர் பயனடைவர். இச்சிறப்பான வாய்ப்பை வழங்கிய மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றனர்.
The post தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சியே வெற்றிக்கு காரணம்: அரசு பணியில் சேர்ந்தோர் முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.