திருச்சி, ஏப் 23: திருச்சியில் வெவ்வேறு இடங்களில் 2 பேரிடம் பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். திருச்சி, கொட்டப்பட்டு, ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் கண்ணன் (51), ஆட்டோ ஓட்டுனர். ஏப்.20ம் தேதி ஆட்டோவில் பொன்மலை, சாய்பாபா கோயில் வழியாக சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்து ரூபாய் ஆயிரம் பணத்தை பறித்துகொண்டு தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இதேபோல் திருச்சி, மேலஅம்பிகாபுரம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (51), ஏப்.20ம் ேததி அரியமங்கலம், கல்லான்குத்து ரயில்வே பாதை வழியாக வந்தபோது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ.1000ம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து புகாரின் போில் அரிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து 2 பேரிடம் பணம் பறித்த பொன்மலை, முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (25) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 1 கத்தி, ரூ.500 பணம் மற்றும் 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
The post வெவ்வேறு இடங்களில் 2 பேரிடம் பணம் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.