சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை

சிவகங்கை, ஏப்.9: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரண்டு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காரைக்குடி அருகே கொத்தரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(எ)பழனிச்சாமி(56). கொட்டகை போடும் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு கொட்டகை போட சென்றுள்ளார். அப்போது அங்கு 16வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் சாட்டப்பட்ட பழனிச்சாமிக்கு இரண்டு வாழ்நாள் சிறையும் ரூ.2ஆயிரம் அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

The post சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: