முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 30ம் தேதி நடக்கிறது

சென்னை, டிச.22: முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 30ம் தேதி நடக்கிறது. சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில், வரும் 30ம் தேதி அன்று காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

எனவே, சென்னை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோர் ஆகியோர்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன், தங்கள் குறைகளை மனுக்கள் வாயிலாக நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: