ஒட்டன்சத்திரத்தில் பாஜ ஆலோசனை கூட்டம்

ஒட்டன்சத்திரம், டிச. 22: ஒட்டன்சத்திரத்தில் பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பயணத்தை சிறப்பான முறையில் வரவேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் தொகுதி பார்வையாளர் திருமலைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, கருப்புச்சாமி, மாவட்ட பொது செயலாளர்கள் கண்ணன், லீலாவதி, தொகுதி அமைப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ருத்திரமூர்த்தி, பெரியசாமி, நகர தலைவர் குமார்தாஸ், ஒன்றிய தலைவர்கள் கிழக்கு சதிஷ், மேற்கு நாட்டுத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

 

Related Stories: