மதுரை, டிச. 22: மதுரை மாட்டுத்தாவணிபேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் முக்குலத்தோர் எழுச்சி கழக நிர்வாகிகள் 20க்கும் ஏற்பட்டோர் தமிழ்நாடு என்ற வாசகம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டியதோடு, அதுகுறித்த கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் அதனையும் மீறி பேருந்து நிலையத்தில் புறப்பட்டு செல்ல தயாராக இருந்த அரசு பேருந்துகளில், தமிழ்நாடு என்ற வாசகம் அச்சிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டத்தொடங்கினர்.
இதனை தடுத்ததால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
