வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: முதல்வர் உமர்அப்துல்லாவுக்கு, மெகபூபா முப்தி கண்டனம்

ஸ்ரீநகர்: வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான ஒத்திவைப்பு தீர்மானம் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் நிராகரிக்கப்பட்டது. இதற்கு முதல்வர் உமர்அப்துல்லாவை குற்றம் சாட்டி, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறுகையில்,’ முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலத்தில், ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக குரலை எழுப்புவார் அல்லது குறைந்தபட்சம் ஜம்மு காஷ்மீரில் இந்த சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று கூறுவார் என்று நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் வக்பு மசோதா மீதான தீர்மானத்தை காஷ்மீர் சட்டப்பேரவை நிராகரித்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழ்நாடு அரசிடம் இருந்து தேசிய மாநாட்டு கட்சி கற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலமான காஷ்மீரில் இந்த முக்கியமான பிரச்னையை விவாதிக்க கூட தைரியம் இல்லாதது ஆபத்தானது’ என்றார்.

The post வக்பு மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: முதல்வர் உமர்அப்துல்லாவுக்கு, மெகபூபா முப்தி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: