சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்

தமிழகத்தில் சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் வீதம் 14 சிறப்பு நீதிமன்றங்கள் 3 கட்டங்களாக அமைக்கப்படும் என அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நீதி நிர்வாகம் துறை மீதான மானிக்கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிவிப்புகள்:

* திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்.
* திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒரு சார்பு நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சார்பு நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்.
* கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படும்.
* குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், நாமக்கல், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றம் வீதம் 14 சிறப்பு நீதிமன்றங்கள் மூன்று கட்டங்களாக அமைக்கப்படும்.
* திருச்சி மாவட்டம் திருச்சியில் ஒரு கூடுதல் குடும்பநல நீதிமன்றம் புதியதாக அமைக்கப்படும்.
* குற்ற வழக்கு தொடர்வுத் துறையிலுள்ள 325 குற்ற வழக்கு நடத்துநர்களின் பயன்பாட்டிற்காக ஏஐ மென்பொருளை அதன் ஒரு வருட சந்தா தொகையான ரூ.13,03,900 செலவில் கொள்முதல் ெசய்யப்படும்.
* குற்ற வழக்கு தொடர்வு இயக்ககத்தின் பயன்பாட்டிற்கு புதிய அலுவலக அறைகலன்கள் ரூ.10,21,138 செலவில் கொள்முதல் செய்யப்படும்.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள்:
* சிறைகள் மற்றும் சீர் திருத்தப்பணிகள் துறையின் கட்டிடங்களுக்கான ஆண்டு பராமரிப்பு நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.
* மத்திய சிறை வளாகங்கள், மாவட்ட சிறைகள் மற்றும் கிளைச்சிறைகளில் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* சேலம் மாவட்டத்தில் கூடுதல் வசதிகளுடன் மாவட்டச் சிறைச்சாலை வளாகம் கட்டப்படும்.
* நாமக்கல் மாவட்டத்தில் புதிய மாவட்டச் சிறைச்சாலை வளாகம் அமைக்கப்படும்.
* தர்மபுரி மாவட்டச் சிறைச்சாலையில் கூடுதலாக 300 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்படும்.
* நன்னடத்தை பிரிவிற்கு 76 கணினி ,துணை பொருட்கள் ரூ.59 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.
* சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் களப்பணியாளர்கள், சீர்திருத்தப் பணியாளர்களுக்கு ரூ.14 லட்சத்தில் சியூஜி சிம் கார்டுகள் வழங்கப்படும்.

The post சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் appeared first on Dinakaran.

Related Stories: