வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் விதிமீறல்களை தடுக்க அதிகாரிகள் மற்றும் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வெம்பக்கோட்டை போலீசார் வெற்றிலையூரணி அண்ணா காலனியில் சோதனையில் ஈடுபட்ட போது, தமிழ்செல்வம் என்பவரது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பட்டாசு மற்றும் திரி, வெடிமருந்து உட்பட பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து தமிழ்செல்வத்தை கைது செய்தனர்.

Related Stories: