திருப்பூர்: திமுக மகளிரணி மாநாட்டை கண்டு இன்னும் 10 நாள்கள் சங்கி கூட்டம் தூங்கப் போவது இல்லை என துணை முதல்வர் உதயநிதி உரையாற்றியுள்ளார். மொழி, மாநிலம், பெண் உரிமைகள் என்றால் காஷ்மீரில் இருப்பவர்களுக்கே முதலில் நினைவுக்கு வருவது நாம்நான். திமுக ஆட்சிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சிக்கும் பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி. சுயமரியாதைமிக்க மகளிர் குழு இருக்கும் வரை சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டில் நுழையவே முடியாது. தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் நுழைந்தால் அதனை தடுக்கும் சக்தி முதலமைச்சருக்கு உள்ளது. தமிழ்நாடு எப்போதும் அமைதி, சமத்துவம், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
