திண்டுக்கல்லில் பிரபல நகைக் கடையில் திருட்டு; ஊழியர்கள் கைது!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரபல நகைக் கடையில் ரூ.1.43 கோடி மதிப்புள்ள 1 கிலோ தங்க நகைகளை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.43 கோடி மதிப்புள்ள நகைகளை திருடியதாக ஊழியர்கள் 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு 3 பேரை போலீசார் கைது செய்தனர். டிசம்பர் 2ல் கடையில் நகைகளை தணிக்கை செய்தபோது 45 எண்ணிக்கை கொண்ட நகைகள் குறைவாக இருப்பது தெரிய வந்தது. தணிக்கை செய்தபோது இல்லாத நகைகளின் மதிப்பு ரூ.1.43 கோடி என தெரிய வந்த நிலையில், போலீசார் புகார் எடுத்துள்ளனர். நகை மாயமான நிலையில், நகைக் கடையின் துணை பொது மேலாளர் ரேணுகேசன் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

மேலாளர் பாலசுப்பிரமணியன் விடுமுறையில் சென்றபோது பொறுப்பு மேலாளர் சிவா நகைகளை திருடியது அம்பலமானது. செப்டம்பர் 5, நவம்பர் 14ஆம் தேதிகளில் அடுத்தடுத்து பொறுப்பு மேலாளர் சிவா தங்க நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. சேதமான நகைகள் என காண்பித்து நகையை விற்று பணத்தை பங்கு போட்டு கொண்டது விசாரணையில் தெரியவந்தது. நகைகளை திருட பொறுப்பு மேலாளர் சிவாவுக்கு நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ் உடந்தையாக இருந்துள்ளார்.

காசாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், சரவணகுமார், கார்த்திக், விற்பனையாளர் விநாயகன் உடந்தையாக இருந்தது அம்பலமானது. நகைக்கடை துணை பொது மேலாளர் ரேணுகேசன் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக் கடை பொறுப்பு மேலாளர் சிவா, விற்பனையாளர் விநாயகம், காசாளர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: