சென்னை: சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, பொதுக்குழு நடந்த விதம் கேலிக்கூத்தானது என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயர் நகர் அலுவலகத்தில் வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
ராமதாஸ் நடத்திய பொதுக்குழு கேலிக்கூத்து – பாலு
சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு, பொதுக்குழு நடந்த விதம் கேலிக்கூத்தானது. அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு எப்படி நடக்கும் என்ற விதிமுறையே சேலம் பொதுக்குழுவில் மீறப்பட்டுள்ளது.
“ராமதாஸ் பொதுக்குழு முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது
ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவின் ஒரு சி.டி.யே போதும், பாமகவை அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது. ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு, செயற்குழு முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது. பாமக தங்களுக்கு சொந்தமில்லை என ராமதாஸ் தரப்பு எங்களுக்கு சான்றுகளை தந்து கொண்டே இருக்கிறது.
ஓராண்டில் நான்கு முறை தலைவராக தேர்வா? – பாலு
ஓராண்டில் பாமக தலைவராக நான்கு முறை ராமதாஸை தேர்ந்தெடுத்து விட்டார்கள். செயற்குழு கூட்ட தீர்மானங்கள் என்றுதான் முடிவுகளை ராமதாஸ் தரப்பு வெளியிட்டுள்ளது. நிர்வாகக் குழு நடத்தப்படாமலேயே அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கே.பாலு விமர்சனம் செய்தார். ஜூலை 8ம் தேதி நடைபெற்ற செயற்குழுவில் பாமக தலைவராக ராமதாஸை தேர்வு செய்தனர்.
நாங்கள் நடத்திய பொதுக்குழுவுக்கே அங்கீகாரம்
மாமல்லபுரம் பொதுக்குழுவில் அன்புமணிக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் தந்துள்ளது. அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
சேலம் பொதுக்குழு அபத்தம், கேலிக்கூத்து, காமெடி”
அபத்தம், கேலிக்கூத்து, காமெடி ஆகியவற்றுக்கு உதாரணமாக சேலம் பொதுக்குழு உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
