அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நீதி நிர்வாகம் மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிவிப்புகள் :
* அரசு சட்டக்கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு ஆசிரியர் மேம்பாட்டு திட்டப் பயிற்சி வழங்கப்படும்.
* அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்படும்.
* அரசு சட்டக்கல்லூரிகளில் திறன் வகுப்பறை அமைக்கப்படும்.
* அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச பயிற்சிப்பட்டறை நடத்தப்படும்.
* தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அயல்நாட்டு சட்டப் பல்கலைக்கழகங்களுடன் மாணவர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
* அரசு சட்டக்கல்லூரிகளில் மாணவ, மாணவியர் விடுதிகள் புனரமைக்கப்படும்.
* திருச்சி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்திற்கு தொகுப்பு நல்கை நிதி வழங்கப்படும்.
* திருச்சி தேசிய சட்டப்பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் மாணவியர் விடுதி கட்டிடம் கட்டப்படும்.
* சட்டத்துறையில் மின் நூலகம் அமைக்கப்படும்.
The post சட்ட பாடப்புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்படும்: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு appeared first on Dinakaran.