விஜய்யின் லியோவில் நாசரின் தம்பி

சென்னை: விஜய்யின் லியோ படத்தில் நாசரின் தம்பி ஜவஹர் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கும் படம் லியோ. அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் நாசரின் தம்பி ஜவஹர், 1990களில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரகுமானிடம் உதவியாளராக இருந்தார். இதயம், கிழக்கு வாசல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். பிறகு வெளிநாட்டுக்கு சென்றவர். சில வருடங்களுக்கு முன் சென்னை திரும்பினார். வறுமையில் வாடுவதாகவும் நாசர் தனக்கு உதவி செய்யவில்லை என்றும் புகார் கூறினார்.

இந்நிலையில் ஜீவி 2, பனி விழும் மலர்வனம் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இந்நிலையில் அவருக்கு விஜய் படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. லியோ படத்தில் வில்லத்தனமான கேரக்டர் ஒன்றில் ஜவஹர் நடித்திருக்கிறார். இது பற்றி ஜவஹர் கூறும்போது, ‘திடீரென லோகேஷ் கனகராஜ் உதவியாளர் என்னை போனில் அழைத்தார். ஆடிஷன் பார்த்து லியோ படத்தில் நடிக்க காஷ்மீருக்கு அழைத்து சென்றனர். அங்கு 40 நாட்கள் தங்கியிருந்தேன். 15 நாட்கள், நான் நடித்த காட்சிகளை படமாக்கினர். இந்த படத்தில் எனது கேரக்டரை பற்றி சொல்ல முடியாது’ என்றார்.

The post விஜய்யின் லியோவில் நாசரின் தம்பி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: