இந்தியா, பதக்கங்கள் வென்ற ஆசிய விளையாட்டுப்போட்டி, காமன்வெல்த் போட்டி, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, எப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை, ஜூனியர் உலக கோப்பை ஆகிய போட்டிகளில் வந்தனாவின் பங்கு அபாரமானது. அதிலும், 2016ம் ஆண்டு அவர் தலைமையிலான இந்திய அணி, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை முதல் முறையாக வென்றது. இந்திய பெண்கள் அணி இதுவரை 3 ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது. அவற்றில் 2 ஒலிம்பிக் போட்டிகளில் வந்தனா விளையாடி இருக்கிறார். ஒலிம்பிக் போட்டிகளில் ஹாட்ரிக் கோலடித்த ஒரே இந்திய வீராங்கனை என்ற சாதனையை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வந்தனா படைத்தார்.
அவர், இதுவரை 320 சர்வதேச ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடி 158 கோல்களை அடித்துள்ளார். தனது, ‘சூறாவளி’ வேக ஆட்டத்தால் இந்திய பெண்கள் ஹாக்கியின் ‘ஹரிகேன்’ என்று அழைக்கப்படும் வந்தனா, இந்திய பெண்கள் அணிக்காக அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடி, அதிக கோலடித்தவர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வந்தனா நேற்று அறிவித்தார்.
The post ஹாக்கியில் ஹாட்ரிக் கோலடித்த‘ஹரிகேன்’ வந்தனா ஓய்வு: இந்தியாவுக்கு அதிக போட்டிகளில் ஆடியவர் appeared first on Dinakaran.