இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பைக்கு பதில் வேறு பெயரில் வழங்க முடிவு: இசிபி தீவிர ஆலோசனை

லண்டன்: வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையே நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான கோப்பைக்கு வேறு புதிய பெயர் சூட்டப்பட உள்ளது. இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்ததை நினைவுகூறும் வகையில், 2007ம் ஆண்டு, எம்ஏகே பட்டோடி கோப்பை என்ற பெயரில், இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை வெல்பவருக்கு கோப்பை வழங்கப்பட்டு வந்தது. 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த கோப்பையின் பெயரை மாற்றுவது குறித்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெயர் மாற்றம் குறித்து குறிப்பிட்ட காரணம் எதையும் இசிபி தெரிவிக்கவில்லை. இருப்பினும், இரு நாடுகளை சேர்ந்த சமீபத்திய கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயரை, பரிசுக்கோப்பைக்கு வைக்க இசிபி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் இங்கிலாந்து – இந்தியா இடையே நடைபெறும் போட்டியின்போது, புதிய பெயரில் கோப்பை வழங்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பைக்கு பதில் வேறு பெயரில் வழங்க முடிவு: இசிபி தீவிர ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: