லக்னோ-மும்பை இன்று மோதல்

லக்னோ: ஐபிஎல் போட்டியின் 16வது லீக் ஆட்டம் இன்று லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

  • இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது. கடைசியாக சொந்த களத்தில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
  • மும்பையும் இதுவரை 3 ஆட்டங்கள் விளையாடி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது. கடைசியாக சொந்த களத்தில் நடந்த ஆட்டத்தில் மட்டும் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  •  ஏற்கனவே இந்த அணிகள் மோதிய 6 ஆட்டங்களில் லக்னோ 5 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. ஒரு ஆட்டத்தில் மட்டும் மும்பை வென்றது.
  •  இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக லக்னோ 214, மும்பை 196 ரன் எடுத்துள்ளன.
  •  இதுவரை 5 முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ள மும்பையின் வேகம் லக்னோவிடம் இதற்கு முன் எடுபடவில்லை.
  •  லக்னோ, மும்பை என 2 இடங்களிலும் நடந்த ஆட்டங்கள் எல்லாவற்றிலும் லக்னோ தான் வென்றுள்ளது.
  •  இரு அணிகளுக்கும் பொதுவான சென்னையில் 2024ம் ஆண்டு நடந்த பிளே ஆப் சுற்றில் மட்டும் மும்பை வென்று இருக்கிறது.
  •  இவ்விரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய 5 ஐபிஎல் ஆட்டங்களில் லக்னோ 2-3 என்ற கணக்கிலும், மும்பை 1-4 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை பெற்று இருக்கின்றன.
  •  மும்பையில் ஏப்.27ம் தேதி நடைபெற உள்ள 45வது லீக் ஆட்டத்தில் இந்த 2 அணிகளும் மீண்டும் மோத உள்ளன.

முந்துகிறார் சாய் சுதர்சன்
ஐபிஎல் போட்டி தொடங்கி 10 நாட்கள் ஆன நிலையில் அதிக ரன் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி போட்டியில், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரனை(189ரன்), குஜராத் வீரர் சாய் சுதர்சன்(186ரன்) நெருங்கியுள்ளார். அடுத்த 3 இடங்களில் உள்ள ஜோஸ் பட்லர்(குஜராத்), ஸ்ரேயாஸ் அய்யர்(பஞ்சாப்), டிராவிஸ் ஹெட்(ஐதராபாத்) ஆகியோர் முறையே 166, 149, 136ரன்கள் எடுத்துள்ளனர்.

தடுமாறும் ரஷீத்
ஐபிஎல் தொடர்களில் எப்போதும் கவனிக்கதக்க வீரராக இருப்பவர் குஜராத் வீரர் ரஷீத் கான்(ஆப்கானிஸ்தான்). ஆனால் இந்தமுறை இதுவரை விளையாடி 3 ஆட்டங்களிலும் ரஷீத்கான் தடுமாற்றத்தைதான் வெளிப்படுத்தி வருகிறார். பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 4ஓவர் வீசி 48ரன் அள்ளிதந்து ஒரு விக்கெட் எடுத்தார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். கூடவே கிடைத்த 2ஓவரிலும் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. பிறகு பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 4ஓவர் வீசி 54ரன் வாரி வழங்கினார். விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. அவருடன் இணைந்து பந்து வீசும் இளம் வீரர் சாய் கிஷோர், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷத் கான் ஆகியோருடன் அனுபவ வீரர் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசுகின்றனர்.

The post லக்னோ-மும்பை இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: