இந்த சாதனைப் பட்டியலில் சென்னை, பெங்களூரு அணிக்கு எதிராகவும், கொல்கத்தா, பஞ்சாப் அணிக்கு எதிராகவும், 21 வெற்றிகளை பெற்று 2ம் இடத்தில் உள்ளன. தவிர, மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை பெற்றுள்ள 10வது வெற்றி இது. ஒரு மைதானத்தில் ஒரு ஐபிஎல் அணி பெற்றுள்ள அதிகபட்ச வெற்றி இதுவே.
* கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக பந்து வீசிய அஷ்வனி குமார், தனது முதல் போட்டியிலேயே, 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி தன் அணிக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். போட்டியின் ஆட்ட நாயகனும் அவரே. தவிர, அறிமுகப் போட்டியில் 4 விக்கெட்டுகளை சாய்த்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தி உள்ளார்.
சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் நிராகரித்த பின், வெறும் ரூ. 30 லட்சத்துக்கு அஷ்வனி குமாரை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முதுகில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இடம்பெற முடியாத நிலையில், அவர் இல்லாத குறையை அஷ்வனி குமார் ஈடு செய்து விட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post சொந்த மைதானத்தில் மும்பை புதிய வரலாறு appeared first on Dinakaran.