ஐஎஸ்எல் அரையிறுதி; ஜாம்ஷெட்பூர் மோகன் பகான் முதல் சுற்றில் இன்று மோதல்

ஜாம்ஷெட்பூர்: ஐஎஸ்எல் கால்பந்து போட்டி அரையிறுதி தலா 2 சுற்றுகளாக நடைபெறுகின்றன. முதல் சுற்று அரையிறுதியின் 2வது ஆட்டத்தில் இன்று ஜாம்ஷெட்பூர் எப்சி-மோகன் பகான் எஸ்ஜி அணிகள் மோதுகின்றன. நடப்புத்தொடரில் மோகன் பகான் அணி லீக் சுற்றில் முதலிடம் பிடித்து லீக் சாம்பியன் கேடயத்தை 2வது முறையாக கைப்பற்றியது. இதன் மூலம், நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது. லீக் சுற்றில் 5வது இடம் பிடித்த ஜாம்ஷெட்பூர். 4வது இடம் பிடித்த நார்த்ஈஸ்ட் யுனைடட் அணியை பிளே ஆப் சுற்றில் வீழ்த்தியது. அதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இரு அணிகளும் நடப்புத் தொடரில் 3வது முறையாக மோத உள்ளன. ஏற்கனவே லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் மோகன் பகான் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடர்ந்து 2வது ஆட்டத்தை இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்தன.மோகன் பகான் 5வது முறையாகவும், ஜாம்ஷெட்பூர் 2வது முறையாகவும் ஐஎஸ்எல் பிளே ஆப் சுற்றில் விளையாடுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த ஆட்டத்தில் மட்டுமின்றி, அடுத்து கொல்கத்தாவில் ஏப்.7ம் தேதி நடைபெற உள்ள 2வது அரையிறுதி சுற்றிலும் சாதித்தால்தான் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியும். அதற்கு முன்னோட்டமாக இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்கு மல்லுக்கட்டும்.

The post ஐஎஸ்எல் அரையிறுதி; ஜாம்ஷெட்பூர் மோகன் பகான் முதல் சுற்றில் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: