சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் எம்மா, ஆஷ்லின்

சார்லஸ்டன்: அமெரிக்காவில் சார்லஸ்டன் ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அங்கு இந்திய நேரப்படி நேற்று காலை 2வது சுற்று ஆட்டங்கள் தொடர்ந்தன. அதிலொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் எம்மா நவர்ரோ, ஹெய்லி பாப்டிஸ்ட் ஆகியோர் மோதினர். அதில் எம்மா 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வர்வாரா கிரெச்சேவாவை 6-3, 7-5 என நேர் செட்களில் பெல்ஜியம் வீராங்கனை எலீஸ் மெர்டன்ஸ் வென்றார். ஒரு மணி 56நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றியினால் எலீஸ் 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டடத்தில் அமெரிக்க வீராங்கனைகள் ஆஷ்லின் க்ருய்கெர், கேதி வாலிநெட்ஸ் ஆகியோர் மோதினர். அதில் ஆஷ்லின் ஒரு மணி 30 நிமிடங்களில் 6-3, 7-6(7-4) என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்றார்.

The post சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் எம்மா, ஆஷ்லின் appeared first on Dinakaran.

Related Stories: