‘போர் தொழில்’ கிரிமினல் மூளைக்குள் ஊடுருவும் கதை: சொல்கிறார் சரத்குமார்

சென்னை: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடித்துள்ள படம், ‘போர் தொழில்’. கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட், E4 எக்ஸ்பரிமெண்ட்ஸ், எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. வரும் 9ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

படம் குறித்து சரத்குமார் கூறுகையில், ‘எலியும், பூனையுமாக இருக்கும் இருவர் எப்படி இணைந்து தொடர் கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கின்றனர் என்பது கதை. இப்படத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். காரணம், குற்றவாளியின் மூளைக்குள் ஊடுருவி, அவன் எதற்காக குற்றம் செய்தான் என்று கண்டறிய வேண்டும் என்பதை விரிவாக சொல்லியிருக்கிறோம்’ என்றார்.

அசோக் செல்வன் கூறும்போது, ‘கடந்த 2015 முதல் இப்படத்தின் மூலக்கதை குறித்து நானும், எனது கல்லூரி நண்பன் விக்னேஷ் ராஜாவும் விவாதித்துள்ளோம். காவல்துறையில் பயிற்சி பெற்று, கள அனுபவம் இல்லாத இளம் காவலரும், கள அனுபவம் அதிகமுள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி இணைந்து பணியாற்றுகின்றனர் என்பது கதை. சரத்குமாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். நிகிலா விமல் ஹீரோயின். ‘போர் தொழில்’ 2ம் பாகத்திலும் நடிக்க விரும்புகிறேன்’ என்றார்.

The post ‘போர் தொழில்’ கிரிமினல் மூளைக்குள் ஊடுருவும் கதை: சொல்கிறார் சரத்குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: