பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்க 35 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்த 149 பாசன அமைப்புகளை புனரமைப்பு, மறுசீரமைக்க ரூ.722.55 கோடி ஒதுக்கீடு என்பன உள்பட 18 அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்:
* நீர்வளத் துறைக்கு சென்னையில் நவீன வசதிகளுடன்கூடிய ஒருங்கிணைந்த கூடுதல் அலுவலகக் கட்டிடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
* 15 மாவட்டங்களில், 21 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணிக்கு ரூ.374.95 கோடியில் அனுமதி தரப்பட்டுள்ளது.
* 8 மாவட்டங்களில், 9 இடங்களில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி ரூ.184.74 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* 4 மாவட்டங்களில், 4 இடங்களில் ஆறுகளின் குறுக்கே புதிய நீரொழுங்கிகள் அமைக்கும் பணி ரூ.6.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு கடைமடை நீரொழுங்கி அமைக்கும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* மயிலாடுதுறை மற்றும் திருச்சி மாவட்டங்களில், 2 இடங்களில், படுகை அணை மற்றும் தள மட்டச் சுவர் அமைக்கும் பணிக்கு ரூ.3.57 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு கீழ்க்குமிழி அமைக்கும் பணி ரூ.4 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* ஆறுகளின் குறுக்கே 8 மாவட்டங்களில், 17 இடங்களில், பாலங்கள் மற்றும் தரை பாலங்கள் அமைக்கும் பணிக்காக ரூ.130.80 கோடி மேற்கொள்ளப்படும்.
* ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், முன்னாள் ஜமீன் கண்மாய்களான 14 குறு பாசன கண்மாய்களைப் தரப்படுத்தும் பணிக்கு ரூ.9.34 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி மற்றும் கடற்கரை பாதுகாப்புப் பணிகளுக்கான “கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி” பெறுவதற்கான முதற்கட்ட பணிக்கு ரூ.1.34 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்கவும், 35 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பிற்காக ரூ.722.55 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* அணைகள் மற்றும் அணை பகுதிகளில் உள்ள கட்டுமானங்களைப் பழுது பார்த்தல் பராமரித்தல் புதுப்பித்தல் பணிகள் மற்றும் அதன் தொடர்ப்புடைய உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் 6 மாவட்டங்களில் 13 இடங்களில் ரூ.19.80 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* அணைகள் மற்றும் கதவணைகளின் கதவுகளை பழுதுபார்த்தல் அணையின் பிற பழுதுகளை சரிப்பார்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் 11 மாவட்டங்களில் 16 இடங்களில் ரூ.149.9 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* 11 மாவட்டங்களில் 48 இடங்களில் நீரொழுங்கிகள் மற்றும் மதகுகளில் உள்ள கதவுகளை பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் ரூ.21.6 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* 7 மாவட்டங்களில் 11 இடங்களில் வெள்ளத் தணிப்பு பணிகள் ரூ.131.28 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டூம் பணி ரூ.6.74 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூர் அணைக்கட்டினை புனரமைத்து சீரமைக்கும் பணி ரூ.130 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* சென்னை மற்றும் அதன் புற மாவட்டங்ளான திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர வெள்ள தணிப்புக்கான ஒருங்கிணைந்த 12 வெள்ள மேலாண்மை பணிகள் ரூ.338 கோடியில் மேற்கொள்ளப்படும்.
The post 35 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்த 149 பாசன அமைப்புகளை புனரமைக்க ரூ.722.55 கோடி ஒதுக்கீடு: 18 அறிவிப்புகள் வெளியீடு appeared first on Dinakaran.